>

விஸ்வரூபத்துடன் போட்டியிடும் மாற்றான்


 


விஸ்வரூபம் மற்றும் மாற்றான் இரு படங்களுமே ஒக்ரோபர் 12ம் திகதி வெளியாக உள்ள நிலையில் இரண்டு படங்களுக்கு மத்தியில் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம்.

உலக நாயகன் கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார் இப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கான டிரைலரில் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் இரண்டு நாடுகளையும் காட்சிப்படுத்துவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்தே காணப்படுகிறது.

இதற்கிடையே அயன் வெற்றிக்குப்பிறகு சூர்யா- கே.வி.ஆனந்த் இருவரும் மாற்றான் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கான இரண்டு டிரெய்லர்கள் வெளியானது. இரண்டுமே ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.

இவ்விரண்டு படங்களுமே முக்கிய நாயகர்கள் நடித்த படம் என்பதால், ஒரு வார இடைவெளியில் வந்தால் நன்றாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் எண்ணுகிறார்கள்.

ஒரே சமயத்தில் இவ்விரண்டு படங்களுமே வந்தால் 1000 திரையரங்குகளுக்கு மேலாக வெளியாகும். ஆகையால் இரண்டு படங்களுமே ஒரே சமயத்தில் வெளிவரும் வாய்ப்பு குறைவு.

கமல் சூர்யாவிற்காக விட்டுக் கொடுக்கிறாரா அல்லது சூர்யா கமலுக்காக விட்டுக் கொடுக்கிறாரா என்பது தான் தற்போதைய கேள்வி.

'கும்கி' இசை வெளியீட்டு விழா கமல் வரும் வரை காத்திருந்து, அதற்கு பிறகு இசை வெளியீட்டு அரங்கில் நுழைந்தவர் சூர்யா. இந்த விடயத்தில் எப்படி என்பது இனிமேல் தான் தெரியும்.

 
-