பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான ரித்திக் ரோஷனின் வசம் க்ரிஷ் 3 படம் தவிர வேறு எதுவும் இல்லை.
பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் ரித்திக் ரோஷன். அவர் தற்போது அவரது தந்தை ராகேஷ் ரோஷனின் க்ரிஷ் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த பட வேலைகள் முடிந்துவிட்டால் அவரது வசம் ஒரு படம் கூட இல்லை. தி இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா என்ற நாவலைத் தழுவி கரண் ஜோஹார் எடுக்கும் படத்தில் ரித்திக் ரோஷன் நடிக்கிறார் என்றும், கரணின் மேலும் ஒரு படம், கபீர் கானின் படம் மற்றும் சேகர் கபூரீன் பானி ஆகிய படங்களிலும் அவர் நடிக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
இது குறித்து அவர் கூறுகையில்,
க்ரிஷ் 3 தவிர நான் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யவில்லை. அதனால் க்ரிஷ் 3 முடிந்த பிறகு எனக்கு வேலையில்லாமல் போய்விடும். இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா பற்றி வெறும் பேச்சுவார்த்தை தான் நடைபெறுகிறது. அடுத்து என்ன செய்வது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
நான் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். நல்ல திரைக்கதை உள்ளவர்கள் என்னிடம் வரவில்லை என்றார்.
கரிஷ் 3 படத்தில் ரித்திக்குடன் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனௌத், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.