அடுத்தடுத்து திருத்தம், மதுரை சம்பவம், போடிநாயக்கனூர் கணேசன் போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது சங்கராபுரம் என்ற புதிய படத்தில் பொலிஸ் வேடமேற்று நடித்துவருவதாக நமது ஊடக பேட்டியில் தெரிவித்தார்.
இப்படத்தில் தனக்கு அப்பாவாக கலாபவன் மணி நடிப்பதாகவும் அவருடன் நடிப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
மேலும் மலையாள பட அதிபர்களின் தயாரிப்பில் மேலும் இரண்டு படங்களில் நடிப்பதாக ஹரிகுமார் தெரிவித்தார்.
மலையாளத்தில் அருள் மூவிஸ் சந்திரன் தயாரிப்பில் நடிப்பதாக கூறினார்.
இப்படத்திற்கு களம் அல்லது போட்டி என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது இன்னும் 2, 3 நாட்களில் உறுதியாகிவிடும் என்று தெரிவித்தார்.
எந்த நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹரி குமார், தற்சமயத்தில் சினிமாவில் இல்லாத சிம்ரனையும் ஜோதிகாவையும் குறிப்பிட்டார்.