கொலிவுட்டில் பாலகாட்டு மாதவன் என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் விவேக் நாயகனாக நடிக்கிறார்.
ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் குருவண்ண பஷீர் தயாரிக்கும் 'செளந்தர்யா' படத்தை சந்திரமோஹன் இயக்கியுள்ளார்.
சௌந்தர்யா படத்திற்கு அஜ்மல் அஜிஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குநர் கே. பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முதல் சிடியை தியேட்டர் அதிபர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டார்.
அது விவேக் கதையின் நாயகனாக நடிக்கும் பாலகாட்டு மாதவன் படத்தின் செய்தி. இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார் பாக்யராஜ்.
அந்த ஏழு நாட்கள் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் 'பாலக்காட்டு மாதவன்'. அதன் பெயரில் படம் எடுக்கப்போவதை அவர் நினைக்கவே இல்லை.
அந்தப் படத்தின் 'First Look' அறிவிக்கத்தான் அவரை அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.
பிறகு கே.பாக்யராஜ் பேசுகையில், இந்த இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு அறிவிக்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியும்.
ஆனால், அந்த படத்தின் தலைப்பு பாலகாட்டு மாதவன் என்பது இப்போதுதான் தெரிந்தது என்றார்.
இந்த தலைப்பை பார்த்தவுடன் எனக்கு எனது பழைய நினைவுகள் வந்துவிட்டது. அந்த ஏழு நாட்களில் நான் ஒரு வசனம் பேசுவேன், "சாரே இந்த லோகத்தில் ஒரு யோக்கியன் இருக்கிறான் என்றால் அது இந்த பாலகாட்டு மாதவன் தான்" என்ற அந்த வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது.
இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.
இந்தப் படத்துல விவேக் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த தலைப்புக்கு பொருத்தமான நடிகர் விவேக்.
பாலகாட்டு மாதவன் படத்தில் நான் ஒரு காட்சியில் தோன்றுவது போல நடித்தால் நன்றாக இருக்கும். அப்போது தான் அந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
இந்தப் படத்துல நான் இல்லாம இருந்தால் சரியா இருக்காது. அதனால் இந்தப் படத்துல எனக்கு ஒரு கதாப்பாத்திரம் தரணும்னு இயக்குனரை கேட்டுக்கிறேன் என்றார்.