>

பொலிஸை ஏமாற்ற மண்டையை மாற்றிய வெள்ளவத்தை முப்படுகொலையாளி!

தந்தை, தாய், தங்கை ஆகியோரை வெள்ளவத்தை வாடகை வீட்டில் வைத்து பணத்துக்காக கடந்த வாரங்களில் படுகொலை செய்து விட்டு தலைமறைவாகி இருந்த 28 வயது இளைஞன் பிரபாத் குமாரசாமி பொலிஸாரிடம் இருந்து தப்புகின்றமைக்காக சிகை அலங்காரத்தை முற்றிலும் மாற்றி இருந்தார்.
ஆயினும் தனியார் பஸ் ஒன்றில் கொழும்பில் இருந்து குருணாகல் நோக்கி கடந்த 24 ஆம் திகதி இவர் பயணித்துக் கொண்டிருந்தபோது சக பயணி ஒருவரால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு காட்டிக் கொடுக்கப்பட்டார்.
இவர் யோக்கட்டில் நஞ்சு கலந்து கொடுத்து குடும்ப அங்கத்தவர்களை கொன்று இருக்கின்றார்.
இவர் மிகவும் ஆடம்பர பகட்டு வாழ்க்கையில் ஈடுபட்டு பெரிய கடனாளி ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
-