இலங்கையின் நட்பு நாடு இந்தியாவல்ல சீனாவே என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தொடரும் என்று மத்திய அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்தையே அவமதிப்பதாகும் செயலாகும்.
தமிழக மீனவர்கள் 546 பேரை கொன்று குவித்த ஒரு நாட்டின் இராணுவத்துக்கு தொடர்ந்து பயிற்சி கொடுப்போம் என்று கூறுவார்களேயானால், இந்திய மீனவர்கள் மீதும், அந்நாட்டு தமிழினத்தின் மீதும் இலங்கை படைகள் நடத்திய, நடத்திவரும் தாக்குதல்கள் நியாயமானது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை நட்பு நாடு என்றால், தமிழ்நாடும், தமிழர்களும் இந்திய நாட்டின் எதிரிகளா? இலங்கையின் நட்பைப் பெற இந்தியா தாரை வார்த்த கச்சதீவில் சீனாவின் இராணுவ நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கையை நட்பு நாடு என்கிறார். எந்த அடிப்படையில் இலங்கை, இந்தியாவின் நட்பு நாடு என்பது புரியவில்லை.
தனது நட்பு நாடு என்று மத்திய அரசு கூறும் இலங்கை, ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் அது சீனாவிடம் நெருங்கிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.