கணிணிமயமான இன்றைய கால கட்டத்தில் மக்களின் மூட நம்பிக்கை
குறைந்தபாடில்லை. பேய் , பில்லி சூனியம், சாமியார்கள் என்று அந்த
மூடநம்பிகையை மூலதனமாக வைத்து பல மோசடிகள் நடந்து வருகின்றன. பேய் தன்னை
அழைத்ததால் நான் போகிறேன் என்று எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி.
ஆம்பூர்
சான்றோர் குப்பம் சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குறிஞ்சி மலர்.
இங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று அவர் பள்ளிக்கு
சென்று வீடு திரும்பியவ்ர், வீட்டில் உள்ள மின்விசிறியில சேலையால் தூக்கு
போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் வீடு திரும்பிய தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து
அதிர்ச்சியடைந்தார். உட்னே ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
வந்த போலீஸ். மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி
விட்டு. மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய அவர் எழுதி
வைத்த கடிதத்தை கண்டனர்.
அதில், கடந்த சில நாட்களாக பேய் என்னையும் எனது உறவினர், நண்பர்கள் 4
பேரை கூப்பிட்டது.அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய்
கூப்பிட வேண்டாம் என்று கூறி தான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது
சாவுக்கு வேறு காரணம் இல்லை””என்று எழுதி வைத்துள்ளார் குறிஞ்சி மலர்.
இந்த மாணவியின் தந்தை முத்துகுமார் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு தூக்கு
போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது மேலும் கிடைத்த தகவல்.
சிறகுவிரித்து பறக்கவேண்டிய இளம் பறவை இப்படியா முடிவு தேடிக்கொள்ள துணிய வேண்டும்.