ஜேர்மனியில் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவாக இருப்பதால், முதுமையிலும் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் ஊர்சுலா வான் டெர் லெயென் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.
அக்கடிதத்தில், தற்போது மாதம் 2500 யூரோ சம்பளத்தில் முழுநேரப் பணியாளராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தால் இன்றைக்கு வழங்கும் அடிப்படை ஓய்வூதியமான 688 யூரோவை விட இனி குறைவாகவே கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடிப்படை ஓய்வூதியத்தை விட அதிகத்தொகை வேண்டுவோர் மாதம் 2200 யூரோ சம்பளத்துக்கு இனி நாற்பதாண்டு காலம் முழுநேரப் பணியாளராக உழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த புதிய முறையின் படி பணி செய்தால் ஓய்வூதியம் மாதத்துக்கு 850 யூரோ வரை கிடைக்கும்.
ஆனால் இவரது இந்த திட்டத்திற்கு கூட்டணிக் கட்சியான விடுதலைக் குடியரசுக் கட்சியோடு, இவரது கட்சியான கிறிஸ்தவக் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது சராசரியாக வழங்கப்படும் அடிப்படை ஓய்வூதியம் 51 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.