>

பேஸ்புக்கில் இணைந்துள்ள 101 வயது பெண்: வலைத்தளத்தின் மிக மூத்த உறுப்பினர் என்ற பட்டம்

அமெரிக்காவை சேர்ந்த 101 வயதான பெண் பேஸ்புக் தளத்தில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.

இளையத் தலைமுறையினர் மட்டுமே சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்துவதாக கருதப்படும் நிலையில், நூறு வயதை கடந்த பெண் இதில் ஆர்வம் காட்டுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ பார்க்கைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் டெட்லர். லாஸ் ஏஞ்சல்ஸ் ஆக்சிடென்டல் கல்லூரியில் 1932ஆம் ஆண்டு பட்டம் முடித்த இவர், 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கில் இணைந்தார்.

தற்போது 101 வயதான இவரை வலைத்தளத்தின் மிக மூத்த உறுப்பினர் என்ற அந்தஸ்து அளித்து பேஸ்புக் நிறுவனம் சிறப்பு கவுரவம் செய்துள்ளது.
கலிபோர்னியாவின் சிலிகான்வேலியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு, பிளாரன்சை அழைத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் மற்றும் தலைமை நிர்வாகி ஷெரில் சேண்ட்பர்க் ஆகியோர் வாழ்த்து தெரித்துள்ளனர்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை சேண்ட்பர்க் பேஸ்புக்கில் வெளியிட்டு மூத்த உறுப்பினர் பிளாரன்சுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 95 கோடிக்கும் மேல் உள்ளது. இதில் புதிதாக இணையும் பயனாளர்களில் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 
-