>

ஏ படங்களை ஒளிபரப்ப இனி தடை: பில்லா- 2 படத்திற்கு பாதிப்பு


 

திரையுலகில் “ஏ” சான்றிதழ் பெற்ற படங்களை இரவு 12 மணிக்கு மேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொலிவுட், பாலிவுட் என எந்த மொழிப் படங்களாக இருந்தாலும் “ஏ” சான்றிதழ் பெற்றே பெரும்பாலான படங்கள் திரைக்கு வருகின்றது.

இந்த படங்களை தனியார் தொலைக்காட்சிகள் அதன் ஒளிப்பரப்பு உரிமைகளை பெரும் விலை கொடுத்தே வாங்குகின்றன.

இந்நிலையில் மத்திய தணிக்கைக்குழு இந்த தடையை விதித்துள்ளது. அதன் படி, தனியார் தொலைக்காட்சிகள் இரவு 12 மணிக்கு மேல் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை வெளியிடக்கூடாது.

இதற்கு முன்பு வித்யாபாலன் நடித்த த டர்ட்டி பிக்சர்ஸ் படம் ரூ.20 கோடிக்கு விற்பனையானது.


பெரும்பாலான தயாரிப்பு நிறுவனங்கள் தொலைக்காட்சிகளுக்கு உரிமங்களை வழங்குவதன் மூலமே 20 சதவீதம் இலாபம் அடைந்து வந்தன. தற்போது மத்திய அரசின் இந்த தடையால் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கொலிவுட்டில் வெளியான பில்லா- 2 படத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 
-