பிரியங்கா
சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது
பற்றி அவர் கூறியதாவது: என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும்
தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில்
திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள்.
நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக
இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள். ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள்
வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி
என்பதுகூட எனக்கு தெரியாது. பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி
புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான். நான் பிளாஸ்டிக் சர்ஜரி
செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான்
எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில்
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால் அதுவே மனதை ஆட்டிப்
படைக்கும் என்ற நிலை ஏற்பட் டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது
என்னுடைய படங்களின் வெற்றிதான். நடிகையாக இருப்பது எனக்கு
பிடித்திருக்கிறது. ஆனால் மேம்போக்கான தோற்றங்களை பார்த்து என்னை
எடைபோடுவது பிடிக்காது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம்
அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய
கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு
பிடித்தவகையில் இருக்கிறது.