எஸ். எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சுதீப் நடித்த ஈகா ( நான் ஈ) திரைப்படம் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெலுங்கில் நடித்த படம் ஈகா. இது தமிழில் நான் ஈ ஆகா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் ஈ தான் ஹீரோ என்றாலும் வில்லன் சுதீப் ஈயிடம் மாட்டிக்கொண்டு படும் பாடு நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட விதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. இதனால் மிகப்பெரிய நடிகர்கள் நடித்த திரைப்படங்களைக்கூட எடுத்துவிட்டு தமிழ்நாட்டில் நான் ஈ திரைப்படங்களை திரையிட்டனர்.
இந்த திரைப்படம் ஆந்திராவிலும், தமிழிலும் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறாதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது நான் ஈ. கன்னட நடிகரான கிச்சா சுதீப் பிற்கு தெலுங்கு திரை உலகில் ரசிகர் மன்றம் அமைக்க ஆரம்பித்துவிட்டனர் தெலுங்கு ரசிகர்கள்.