திரையுலகில் சினிமா எடுப்பதற்கு இன்னும் 8 வருடத்திற்கான கதைகள் இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மிஷ்கினின் கனவுப்படமான முகமூடி நாளை திரைக்கு வருகின்றது.
சிறு வயது முதலே ஆங்கில கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்க முடையவராக திகழ்ந்த மிஷ்கின், அதில் வரும் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்தே முகமூடியை உருவாக்கியுள்ளார்.
இப்படத்திற்காக ஒரு நாளைக்கு 2 மணி நேரமே தூங்கியிருக்கிறார் மிஷ்கின்.
மற்றபடி தன்னிடம் இது போன்ற கதைகள் இருப்பதாக தெரிவித்த இவர், இன்னும் 8 வருடத்திற்கு உரிய கதைகள் இருப்பதாகவும் கூறினார்.
பிற மொழிகளில் படங்கள் எடுக்க தற்போது ஆர்வம் காட்ட வில்லை என்றும் பின்வரும் காலங்களில் எடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
தனது படங்களில் தொப்புள், முத்தக்காட்சி எப்பொழுதும் இருக்காது என உறுதிபட தெரிவித்தார் மிஷ்கின்.
இப்படத்திற்காக ஜீவா, 11 கிலோ எடையுள்ள உடையை அணிந்து கொண்டு தினசரி 8 மணி நேரம் ஓய்வில்லாமல் 91 நாட்கள் நடித்திருப்பதாகவும் மிஷ்கின் புகழாரம் சூட்டினார்.