>

Aug 27 திருமணம் ஆனதால் அக்கா,அண்ணி வேடமா? கோபத்தில் ரீமா சென்


 

தனது திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வந்து இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள் என்று ரீமா சென் கோபப்படுகிறார்.

'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார்.

'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடிப்பது குறித்து ரீமா சென் தெரிவித்து இருப்பது " எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் குறைந்துவிடுமா?.

நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் நடித்தேன். 

ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை.

எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம். " என்று தெரிவித்து இருக்கிறார்.

 
-