மெரினா,
3 படங்களில் செகண்ட் ஹீரோ ரேஞ்சில் இருந்த சிவகார்த்திகேயன், "மனம்
கொத்திப் பறவையில் ஹீரோவாகி விட்டார். இப்போது, அவரை ஹீரோ சான்ஸ்
துரத்துகிறது.
தனுஷ்,
தற்போது ஒரு இளமை துள்ளும் காதல் கதையை படமாக தயாரிக்கிறார். இப்படத்தை,
"ஆடுகளம் படத்தில், இயக்குனர் வெற்றி மாறனிடம் அசோசியேட்டாக வேலை செய்த,
செந்தில் நாதன் இயக்குகிறார்.
இந்தக்
கதையில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தால் பொருத்தமாக இருக்குமென
அபிப்ராயப்பட்டதோடு, அவரே போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனை
ஒப்பந்தமும் செய்துவிட்டார். "3 படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சிறிய நட்பை
வைத்து, நண்பனை தூக்கிவிட நினைக்கும் தனுஷின் பெருந்தன்மையை நினைத்து,
சிலாகிக்கிறார் சிவகார்த்திகேயன்.