விஷ்ணுவர்தன் படத்துக்காக அஜீத் குமார்
ஜிம் சென்று தனது உடலை கும்மென்று வைத்துள்ளார். அஜீத் பெரிய தொப்பை
வைத்திருக்கிறார் என்று கிண்டலடித்தவர்களே ஆச்சரியப்படும் வகையில்
தொப்பையைக் குறைத்துள்ளார். அவரது ஜிம் பாடி போட்டோ டுவிட்டரையே
கலக்கிவிட்டது என்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
விஷ்ணுவர்தன் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்
என்பது அனைவரும் அறிந்ததே. சற்று காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்த
நயன் அஜீத்தின் புதிய கெட்டப்பை பார்த்து அசந்துவிட்டாராம். அட 2007ம்
ஆண்டு பில்லா படத்தில் பணியாற்றியபோது இருந்த மாதிரியே ஸ்லிம்மாக
இருக்கிறாரே அஜீத் என்று வியந்து கூறியுள்ளார்.அஜீத்தின் முடி நரைத்தாலும் அவர் இன்னும் இளமையாகத் தான் உள்ளார் என்று நயன் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் அஜீத் படத்தில் காட்டும் ஈடுபாட்டை அவர் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.