ஸ்ரீகாந்த்,
சங்கீதா நடித்து பிரச்னைகளில் சிக்கிய படம் ‘உயிர்'. கொழுந்தன் மீது
அண்ணன் காதல் கொள்ளும் கதையாக இது அமைந்திருந்ததால் மகளிர் அமைப்பினர்
எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இப்படத்தை தயாரித்தவர் ஆர்.பாலாஜி.
இயக்குனர் ஷங்கரின் உறவினரான இவர் ஷங்கர் தயாரித்த ‘காதல்', ‘அனந்தபுரத்து
வீடு' உள்ளிட்ட படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவர்
முதன்முறையாக இயக்கும் படத்துக்கு ‘கண்பேசும் வார்த்தைகள்' என்று
பெயரிடப்பட்டுள்ளது.
நகைச்சுவைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் தரும் வகையில்
அமைக்கப்பட்டுள்ள இப்படம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் சிங்கப்பூரில் நடக்க உள்ளது. தஞ்சை,
திருவாரூரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது.
‘வாகை சூட வா‘ பட ஹீரோயின் இனியா கதாநாயகி. செந்தில் ஹீரோ. இளவரசு,
மதுமிதா, சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு நாக கிருஷ்ணன்.
இசை ஷாமந்த்நாக். தயாரிப்பு ஆர்.சரவணன்.