‘பல
ஹீரோயின்கள் அக்கா வயதில்தான் இருக்கிறார்கள்’ என்றார் ஆண்ட்ரியா.
இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழில் வெளியான ‘வேட்டை’ படம் தெலுங்கில் ‘பலே
தம்முடு’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஹன்சிகாவின் அக்காவாக என்னை
நடிக்க கேட்டார்கள். இயக்குனர் லிங்குசாமி இதுபற்றி என்னிடம்பேசும்போது,
நல்ல வேடம், ஏற்று நடிக்கச் சொன்னார். பொருத்தமான வேடம் என்று எனக்கும்
தோன்றியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இயக்குனர்
கிஷோர் இயக்கும் இப்படம் எனக்கு புதிய பரிமாணத்தை தரும் என்று
நம்புகிறேன். ‘இவ்வளவு சீக்கிரம் அக்கா வேடத்தில் நடிப்பது ஏன்?’ என்று
கேட்கிறார்கள். நான் டீன் ஏஜ்ஜை கடந்துவிட்டேன். ஆனால் ஹன்சிகாவுக்கு
இப்போதுதான் 21 வயது ஆகிறது. அவருக்கு அக்காவாக நடிப்பதில் எனக்கு தயக்கம்
இல்லை. உண்மையை சொல்ல வேண்டு மென்றால் இப்போதுள்ள பல நடிகைகள் ஹன்சிகாவின்
மூத்த சகோதரிபோல்தான் இருக்கிறார்கள். இதை மற்றவர்கள் ஏற்றாலும்
ஏற்காவிட்டாலும் இதுதான் நிஜம். எனவேதான் என்ன வயது வேடம் என்று
பார்க்காமல் அதில் நடிக்க எவ்வளவு வாய்ப்பிருக்கிறது என்று கவனம் செலுத்த
முடிவு செய்தேன்.
கமல்ஹாசனின்
‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருக்கிறேன். அது விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
சமீபத்தில் வெளியான முத்தக் காட்சி போட்டோபற்றி என்னிடம் இன்னமும்
கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. என்
வாழ்வில் மிகப் பெரிய விஷயங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. எனவே போட்டோ
வெளியான பிரச்னையில் சுழன்றுகொண்டிருக்க விரும்பவில்லை. இவ்வாறு ஆண்ட்ரியா
கூறினார்.