>

எனக்கு கல்யாணம், சும்மா ஜோக்கடிச்சேன்: டுவிட்டரில் நடிகை அடித்த கூத்து


 

முதல் நாள் இரவு டுவிட்டரில் தனக்கு திருமணம் என்று தெரிவித்துவிட்டு மறுநாள் காலையில் எழுந்து திருமணம் செய்துகொள்ளவில்லை ,சும்மா ஜோக்கடித்தேன் என்று பாலிவுட் நடிகை ரைமா சென் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ரியா சென்னின் அக்கா நடிகை ரைமா சென்(32). அவர் டுவிட்டரில் அடித்த கூத்து தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.அம்மணி கடந்த சனிக்கிழமை இரவு டுவிட்டரில், நான் எனது நண்பர் வருண் தாபாரை மணக்கவிருக்கிறேன் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் வருண் முழங்காலிட்டு அவருக்கு மோதிரம் போடுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இதைப் பார்த்தவர்கள் ரைமாவுக்கு திருமணம் என்று நினைத்துவிட்டனர். இரவு தூங்கி மறுநாள் காலையில் எழுந்த ரைமா டுவிட்டரில் மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டார்.
அவரது டுவீட்,


நேற்றிரவு நான் சும்மா ஜோக்கடித்தேன். நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரு நாள் நிச்சயம் அந்த வருணைத் தான் மணப்பேன் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

 
-