>

மராத்தி மொழி கற்கும் நடிகை அசின்.


 

தன்னுடைய படங்கள் அது எந்த மொழியில் அமைந்திருந்தாலும் தன் சொந்த குரலில் பேசி அனைவரையும் அசத்தி வரும் நடிகை, அசின்.அவர் நடிப்பில் வெளிவந்த எந்த மொழிப் படமாக இருந்தாலும் உச்சரிப்பு பிழையின்றி அசத்தலாக தன்னுடைய குரலில் பேசி நடித்திருப்பார்.

அந்த வகையில் தற்போது இந்திப் பட வாய்ப்பொன்றை பெற்றுள்ள நடிகை அசின் அப்படத்தில் மராத்திய பெண்மணியாக நடிக்கவுள்ளார்.இதற்காக மராத்தி மொழியை ஒரு ஆசிரியையின் உதவியுடன் கற்று வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த காலகட்டத்தில் இந்தி பட வாய்ப்பு வந்த போது இந்தி திரையுலகம் சென்ற நடிகை அசின் அங்கு மிக முக்கிய நாயகிகளுள் ஒருவராக பவனி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
-