>

கொலிவுட்டில் உருவாகும் மர்ம படம் அன்றே ஒரு இரவு

கோவிந்தராஜ் மூவீஸ் என்னும் புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய முதல் திரைப்படமாக “அன்றே ஒரு இரவு” என்கிற படத்தைத் தயாரிக்கிறது. வெங்கடஸ்வாமி கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இந்தப் படம் காதல் நிறைந்த காட்சிகளுடன் இசை, நடனத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கதாநாயகனாக ஜெய் ஆகாஷ், பானிராஜ், யுவராஜ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கும் இப்படத்தின் கதாநாயகி தெரிவு நடந்து கொண்டிருக்கிறது.
அற்புதமான ஐந்து பாடல்களுக்கு இசையமைப்பாளர் சாகேத் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இப்படத்தில் சல்சா நடனம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
அன்றே ஒரு இரவு படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நேற்று(26.08.2012) இசையமைப்பாளர் சாகேத் முன்னிலையில், பாடகி ஹேமாம்பிகை பாடிய பாடல் பதிவுடன்  நடைபெற்றது.
பாடலாசிரியர் உவரி க.சுகுமார் பாடல்களை எழுத, ஹனுமந்த் K தாகூர் ஒளிப்பதிவு செய்கிறார்.
V .G அம்பலம் எடிட்டிங்கினைக் கையாள, வசனங்களை எழுதுகிறார் ராஜ்குமார்.
மர்மம் மற்றும் திகில் நிறைந்த இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்கிறது படக்குழு.

 
-