ஜெர்மனியில் தடகள விளையாட்டுப் போட்டி ஒன்றில் நடுவராக
பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், ஈட்டி எறிதல் போட்டியில் எறியப்பட்ட
ஈட்டியால் பலியாகியுள்ளார்.
நாட்டின்
மேற்குப் பகுதியில் உள்ள டுசல்டர்ஃப் நகரில் இளஞர்களுக்காக இடம்பெற்ற ஒரு
விளையாட்டுப் போட்டியின் போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்தப் போட்டியில் 15 வயது இளைஞர் எறிந்த ஈட்டி, தடகளப் போட்டியில் நடுவராக பணியாற்றிக் கொண்டிருந்த 74 வயதானவரின் தொண்டையில் குத்தியதில் அவர் பலியானார்.
போட்டியில் ஈட்டியை எறிந்த சிறுவனை உளவியல் ரீதியாக தேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.
இது ஒரு விபத்து போலவே தோன்றுகிறது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தடகளப் போட்டிகளில் ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் போன்ற போட்டிகளில் நடுவர்களுக்கு எப்போதாவது காயம் ஏற்படுவது உண்டு என்றாலும், மரணம் சம்பவிப்பது மிக மிக அரிதானது என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.