>

இலங்கையில் இருந்து துபாய் செல்கிறது ஒரு இலட்சம் தொன் அரிசி.


 

இலங்கையில் இருந்து இது வரை 500 கொள்கலன்களில் அரிசி அனுப்பப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்  நிலையில் மேலும் ஒரு இலட்சம் தொன் அரிசியை துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதற் தடவையாகவே இந்தளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மேலும் பல நாடுகள் இலங்கையில் இருந்து அரிசியை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 2 மாதத்தினுள் 4 ஆயிரம் கொள்கலன்களில் அரிசி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் அரிசி ஆலைகளில் போதுமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் துரிதமாக அவற்றை வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனைக் கருத்தில் கொண்டு அரிசி ஆலைகள் நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னேற்ற நடவடிக்க எடுக்கப்படும் என்று அமைச்சர்  கூறினார்.

 
-