>

பரீட்சை ஆணையாளரிடம் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணை.



புலனாய்வுப் பிரிவினர் பரீட்சை ஆணையாளர் என்.ஜே. புஸ்பகுமாரவிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

5ம்  ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து பரீட்சை வினாத்தாள் மற்றும் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் என்.ஜே. புஸ்பகுமாரவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிரதேசங்களுக்கு புலானய்வுப் பிரிவின் விசேட குழுக்கள் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 
-