கொலிவுட்டில் கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மாறுபட்ட பாணியில் உருவாகி வருவதாக இயக்குனர் பாண்டிராஜ் கூறியுள்ளார்.
பசங்க, வம்சம், மெரினா படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை இயக்கி வருகின்றார்.
இப்படத்தில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி, சுஜாதா நடிக்கிறார்கள்.
இப்படம் திருச்சி மாநகரை கதைக்களமாக கொண்டு உருவாகி வருகின்றது. இப்படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ், நான் முன்பு இயக்கிய 3 படங்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட படம்.
ஏற்கனவே திரையில் சொல்லப்பட்ட கதையை வித்தியாசமான முறையில் கூறியிருக்கிறேன்.
எவ்வளவு சீரியஸான விடயத்தையும் இவ்வளவு நகைச்சுவையாக சொல்ல முடியுமா? என்று கேடி பில்லா கில்லாடி ரங்கா பேச வைக்கும் என்றார்.
மேலும் இப்படம் பெற்றோர்கள் மீதான மதிப்பை உயர்த்தும் என்றும் கூறியுள்ளார்.
இப்படத்திற்காக திருச்சியைச் சேர்ந்த 200 பேரை நடிக்க வைத்திருக்கிறார் பாண்டிராஜ். தற்போது படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.