அமலா நாகர்ஜுனா மீண்டும் நடிக்க வருவதற்கு நடிகை குஷ்பு தன்னுடைய வரவேற்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா 1982- 1992 வரையிலான திரையுலக காலத்தில் தன்னுடைய வசீகரமான நடிப்பினால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர்.
கொலிவுட்டில் வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், சத்யா போன்ற படங்களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் ஆகியோருடன் நடித்திருக்கிறார்.
1992 ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்த பின்னர், திரை வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.
இந்நிலையில் Life is Beautiful படத்தின் மூலமாக நடிகை அமலா நீண்ட காலத்திற்கு பின்பு நடிக்க வருகிறார்.
இந்த செய்தியை கேட்ட நடிகை குஷ்பு, என்னுடைய நெருங்கிய தோழி அமலா மீண்டும் நடிக்க வருவது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என்று தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.