சமீபத்தில் செல்வராகவனின் ’இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பை ஒரு ‘பார்ட்டியுடன்’முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படக்குழுவுடன் சேர்ந்தார் நடிகை அனுஷ்கா.
அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிற்கு பின்னடைவாக இருந்த அனுஷ்காவின் கால்ஷீட்டும் கிடைத்துவிட வேகமாக நடந்தது அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பு. நல்ல முறையில் துவங்கிய படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டு அனுஷ்கா பாதியிலேயே வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிந்ததைத் தொடர்ந்து விசாரித்த போது, அனுஷ்கா தனக்காக ஒரு புதிய ஒப்பணைக் கலைஞரை வேலைக்கு அமர்த்தியதாகவும், அந்த பெண் ஒப்பணைக் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் அந்த சங்கத்தினர் தான் வந்து பிரச்சனை செய்தார்கள் எனவும், மேலும் அனுஷ்காவையும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் தான் அனுஷ்கா கதறி அழுதபடியே படப்பிடிப்பை விட்டு சென்றுவிட்டார் எனவும் கூறுகின்றனர் படக்குழுவினர்.
கார்த்திக்கு விஷயம் தெரிந்ததும் ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம்.