>

ஒக்ரோபரில் சயீப்- கரினா திருமணம்

பாலிவுட்டில் நீண்ட நாட்களாக காதலித்து வரும் கரீனா கபூரும், சயீப் அலிகானும் வரும் ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளாக இவர்கள் திகழ்கின்றார்கள்.
இருவருக்கும் வயதாவதால் எப்போது திருமணம் நடக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒக்ரோபர் 16ம் திகதி திருமணம் நடக்கலாம் என தகவல் பரவியது.

ஆனால் சயீப் அலிகான் இதனை மறுத்ததுடன் திகதி இன்னும் முடிவாகவில்லை என்றார்.
தற்போது சயீப் அலிகானின் தாயாரும், முன்னாள் நடிகையுமான சர்மிளா தாகூர் ஒக்ரோபர் மாதம் கரீனா கபூர்- சயீப் அலிகான் திருமணம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
ஆனால் திருமணத்திற்கான திகதி பற்றி கூறவில்லை.
இருப்பினும் திருமணத்திகதியை மகன் சயீப் அலிகான் வெளியிடுவார் என்றார்.

 
-