தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பாக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் சங்க உறுப்பினர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களும் பங்குபெறும் வகையில் ஓர் இணைய நாளிதழாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் தளத்தில் 1931 முதல் 2012 வரையிலான தமிழ் சினிமா தகவல், திரைப்படங்களின் Censor Script, E-Book. தமிழ் சினிமா நிகழ்ச்சிகள், செய்திகள் மட்டுமல்லாது தினசரி 12 மணி நேரம் ஒளிபரப்பாகக் கூடிய DIRECTORS TV (WEB TV) ஒன்றையும் தொடங்கியுள்ளனர்
இந்த DIRECTORS TVயில் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களின் குறும்படம் மற்றும் ஆவணப்படங்கள் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர்.
இத்துடன் சினிமாத்துறை நிகழ்வுகளான தொடக்க விழா, இசைவெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.
இணையள தொடக்க விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று இணையதள தொடக்க நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சாட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா DIRECTORS TVயில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
இதுமட்டுமல்லாது, இசை, நடனம், நடிப்பு, ஒளிப்பதிவு என்று திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள இளம் திறமையாளர்கள் தங்களைப்பற்றிய விபரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதன் மூலம் இயக்குனர்கள் இந்தத் திறமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இயக்குனர் சங்கத்தின் இணையதள முகவரி: www.tantis.org