மலையாள நடிகர், நடிகைகளான மம்முட்டி, மோகன் லால், ஜெயராம், பிருதிவிராஜ், நயன்தாரா, அசின், மீராஜாஸ்மீன், பத்மபிரியா, அனன்யா, கோபிகா போன்றோர் வீட்டிலும், படப்பிடிப்பு தளங்களிலும் புத்தாடை உடுத்தி ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
நடிகைகள் வீட்டு வாசலில் பூக்கோலம் போட்டு, விசேட விருந்து சமைத்து சாப்பிட்டனர்.
தற்போது மும்பையில் 'கிலாடி' என்ற இந்திப் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் நடிகை அசின் மும்பையிலேயே ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.
மேலும் ஓணம் பண்டிகை குறித்து அவர் கூறுகையில், எனக்கு பிடித்த ஓணம் பண்டிகையை கேரளாவில் எனது வீட்டில் கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை கேரளா செல்ல முடியவில்லை என்பதால் மும்பையில் கொண்டாடுகிறேன். நண்பர்களை வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து கொடுக்க உள்ளேன்.
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஓணம் பண்டிகைக்கு மலையாளி அல்லாதவர்களையும் வீட்டுக்கு விருந்துக்கு அழைப்பேன். எனது தாயும் விதவிதமாக சமைத்து தருவார்.
பெரும்பாலும் ஓணம் பண்டிகைக்கு எடுக்கும் புத்தாடை பட்டு பாவாடை சட்டையாகத் தான் இருக்கும்.
உறவினர்கள், நண்பர்களுடன் வீட்டில் ஓணத்தை கொண்டாடுவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.