>

முதலில் எனது கழுத்தை வெட்டிவிட்டு ஆட்டுக் கிடாயை வெட்டுங்கள்! மேர்வின் சில்வா தமாஷ்

 
இலங்கையின் முன்னேஸ்வரத்தில் பலி பூஜை நடத்த வேண்டுமாயின் முதலில் எனது கழுத்தை வெட்டுமாறு பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கபிலவஸ்து புனித சின்னம் எமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மிருக பலி பூஜைகளுக்கு எமது நாட்டில் இடமில்லை.

கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கான மிருகங்களை நான் காப்பாற்றினேன். எனக்கு எந்த சாபமும் கிடையாது. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலி பூஜைகளுக்கு மிருகங்களை பக்தர்கள் எடுத்துச் செல்லக் கூடாது. பலி பூஜைகளை தடுக்குமாறு பல அமைப்புக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

எனக்கு எதிராக தேங்காய் உடைத்து பல்வேறு நேர்த்திக் கடன்கள் செய்த போதிலும் எனக்கு எதுவும் நேரவில்லை. எந்த மதத்திலும் கடவுள் வணக்கத்திற்காக மிருகங்களை பலியிடுமாறு குறிப்பிடப்படவில்லை. என்றார் அவர்.

 
-