>

ரீமேக்காகும் 'நீர்க்குமிழி': நாகேஷ் கதாபாத்திரத்தில் விவேக்


 

இயக்குனர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் நாகேஷ் கதாநாயகனாக நடித்து 1965ல் ரிலீசான படம் ‘நீர்க்குமிழி’.
இப்படத்தில் இடம்பெற்ற 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா', பாடல் பிரபலமானது.

இந்த 'நீர்க்குமிழி' படம் தற்போது மீண்டும் ரீமேக் ஆகிறது. நாகேஷ் நடித்த கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் செல்வா இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெமினி கணேசனின் 'நான் அவனில்லை' படத்தை ரீமேக் செய்தவர்.

இதுகுறித்து இயக்குனர் செல்வா கூறுகையில், இன்றைய இளம் ரசிகர்கள் முக்கியமான பழைய படங்கள் பற்றி அறிந்து கொள்ளவதற்காகவே ரீமேக் செய்கிறேன்.

அவர்களுக்கு ரீமேக் படங்கள் புதிய அனுபவத்தை கொடுக்கும். நாகேஷ் நடித்த பாலச்சந்திரின் ‘நீர்க்குமிழி’ படத்தை ரீமேக் செய்ய ஆர்வமாக இருக்கிறேன். நாயகனாக விவேக் நடிப்பார் என்றும் இதன் உரிமையை பெற ஏற்பாடு நடக்கிறது எனவும் கூறியுள்ளார்.

 
-