கொலிவுட்டில் ஜீவா நடித்திருக்கும் 'முகமூடி' படத்திற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி இருக்கிறது.
மிஷ்கின் கனவுப்படமான இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடித்துள்ளார்.
டிராகனாக நரேன் நடித்துள்ளார். இவர்களுடன் நாயகி பூஜா ஹெக்டே, நாசர் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
கே இசையமைத்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
உலகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் ஓகஸ்ட் 31ம் திகதி இப்படம் வெளிவர இருக்கிறது. தமிழ் திரையுலகில் வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னை உள்ள முக்கிய திரையரங்குகளில் இன்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முகமூடி படம் குறித்து யு.டிவியின் தனஞ்செயன், முகமூடி தமிழ் ரசிகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஹாலிவுட் படங்களில் வரும் அற்புத சக்திகள் கொண்ட சூப்பர் ஹீரோக்களோடு ஒப்பிடக் கூடாது.
இப்படம் குங்க்ஃபூ கலையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் மந்திர சக்திகள் எதுவும் இல்லை.
சரியான எதிர்பார்ப்போடு வந்தால் நிச்சயம் உங்களுக்கு இப்படம் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.