>

விரக்தியின் விளிம்பில் விஜய். துப்பாக்கியை தூக்கி ஏறிகிறாரா??

 
துப்பாக்கி தலைப்பு வேண்டாம் என்கிற மனநிலைக்கு முருகதாஸ் வந்துவிட்டார்.  இப்போ படம் தீபாவளிக்கு வெளியானப் போதும் என்கிற நிலைமைக்கு எல்லோரும் வந்தாயிற்று.  ஆனால் நாம் முன்னர் கூறியதுபோல விஜய்க்கு இருந்த மன நிலை இப்பொழுது மேலும் குழம்பி விட்டது. அதாவது படம் ரிலீஸ் ஆக வேண்டும் அதனால் தலைப்பை மாத்தலாம் என்று இருந்தவரை சுற்றி இருப்பவர்கள், இது நமது மானப் பிரச்சனை.  தலைப்பை மாற்றினால் எவரும் நம்மை மதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் கூறி அவரை குழப்பி விட்டார்கள்.
அதனால் தான் ஏறும் மேடையில் எல்லாம் துப்பாக்கி சீக்கிரம் வெடிக்கும் என்று கூறி வந்தவரை நீதிமன்றம் மறுபடியும் சிந்திக்க வைத்து விட்டது. அதாவது மறுபடியும் வழக்கை செப்டம்பர் மாதம் தள்ளி வைத்து விட்டது. அடுத்த முறையும் தீர்ப்பு கிடைக்குமா என்றால் சந்தேகமே.  இதனால் விரக்தியான விஜய் வேறு தலைப்பை தேடும்படி உத்தரவிட்டிருக்கிறார். இப்பொழுது படக் குழுவினர் அனைவரும் துப்பாக்கி போல இன்னுமொரு மாஸான தலைப்பை தேடி வருகிறார்கள்.  இருந்தாலும் செப்டம்பர் மாதம் வழக்கையும் சந்திக்க தயாராகத் தான் இருக்கிறார்கள்.

 
-