>

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் உயிர்மொழி

அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று உயிர்மொழி என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் ராஜா கூறுகையில், கோடியில் ஒருவன், லட்சத்தில் ஒருவன் என்றெல்லாம் யாரும் கிடையாது.
அறிவியல் மரபணு விதிப்படி 5 டிஎன்ஏக்களின் குணாதிசியங்கள் கொண்டவர்களில் ஒருவராக அனைவரும் இருக்கிறார்கள்.
ஆல்பா எனப்படும் டிஎன்ஏவில் பிறந்தவர்கள் தன்னலமற்றவர்களாக இருப்பார்கள். ரமணர், சாய்பாபா, போன்றவர்கள் இந்த வகைப்பிரிவில் அடங்குவர்.
அப்படிப்பட்ட தன்னலமற்றவர்களோ, சாமியார்களோ இப்போது யாரும் கிடையாது. மற்றபடி பீட்டா, காமா, டெல்டா, ஒமேகா எனப்படும் குழப்பம், பழிவாங்குவது, கட்டுப்பாடு, அலட்சிய மனப்பான்மை குணாதிசயங்கள் கொண்டவர்கள் தான் இருக்கிறார்கள். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதை மையமாக வைத்துதான் உயிர்மொழி உருவாகி இருக்கிறது. ஒரு பெண் மேற்குறிப்பிட்ட 5 வகை குணாதிசியங்கள் கொண்டவர்களுடன் பழகி யாரை தனது காதலனாக தெரிவு செய்கிறாள் என்பதுதான் கதை.
மானவ், சர்தாஜ், பாபி ஆண்டனி, சாமஸ், கீர்த்தி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்று தெரிவித்தார்.

 
-