>

நாளை பாகன் இசை வெளியீடு


 

ஸ்ரீகாந்த் நடித்துள்ள பாகன் படத்தின் இசை வெளியீடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.

நண்பன் படத்திற்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்த் படவேலைகளில் மிகவும் பரபரப்பாக உள்ளார்.

தற்போது பாகன் படத்தை முடித்துள்ள நாயகன் ஸ்ரீகாந்த், இன்னும் 15 நாட்களில் தனது அடுத்த படமான எதிரி எண்-3 படத்தை முடிக்க உள்ளார்.
இந்நிலையில் நாளை பாகன் படத்திற்கான இசை வெளியீடு சென்னையில் நடைபெறுகின்றது.

இவ்விழாவில் ஸ்ரீகாந்த், நாயகி ஜனனி அய்யர், புரோட்டோ சூரி, அப்புக்குட்டி, கோவை சரளா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இப்படத்தில் கோவை சரளாவுடன் நடித்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது என்று நமது ஊடக பேட்டியில் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

இப்படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என தான் நம்புவதாகவும் நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

 
-