>

நோர்வேயின் அழகில் வியந்த காஜல் அகர்வால்


 

கொலிவுட்டில் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

அதன் பின்னர் நான் மகான் அல்ல படத்தை தவிர தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

ஆனால் தற்போது சூர்யாவின் மாற்றான், விஜய்யின் துப்பாக்கி என்று எதிர்பார்ப்பு மிகுந்த படங்களில் நடித்து வருகிறார்.

நடிகையான பின்பு உலகிலுள்ள எத்தனையோ நாடுகளுக்கு படப்பிடிப்புக்காக சென்றுள்ள காஜல் அகர்வாலை, நோர்வேயின் அழகு, சொக்க வைத்து விட்டதாம்.

எப்பொழுதும் வித்தியாமான இடங்களை காட்சிப்படுத்த நினைக்கும் இயக்குனர் கே.வி. ஆனந்த் மாற்றான் படத்துக்காக இதுவரை யாருமே படமாக்காத நோர்வேயின் அழகான பகுதிகளை தேடிப்பிடித்து படமாக்கியுள்ளார்.

படம் குறித்து காஜல் அகர்வால் கூறுகையில், இந்தப் படத்தையும் படமாக்கிய நோர்வேயின் படப்பிடிப்புத் தளங்களையும் ரசித்தபடியே நடித்தேன் என்றும் தான் நடித்த படங்களிலேயே, மாற்றான் அழகியல் நிறைந்த படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 
-