
கொலிவுட்டில் பரத் நடித்த சேவல் படம் முலம் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு பெரியளவில் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.
பஞ்சாபி நடிகையான பூனம் பாஜ்வாவிடம், ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்கும், எதிரி எண்-3 என்ற படம் மட்டுமே, தமிழில் கைவசம் உள்ளது.
சிபாரிசு செய்வதாக சொன்ன, சில அபிமான கதாநாயகர்களும் கைவிரித்து விட்டதால், தமிழில் தனக்கு மீண்டும் புதிய படங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்ட இவர், அடுத்து, இந்தி சினிமாவில் நடிக்கப் போகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் உடல்கட்டும், உயரமும், பாலிவுட் நாயகர்களுக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். கதாநாயகியாக மட்டுமல்லாது, வித்தியாசமான கிளாமர் வேடங்கள் கிடைத்தாலும் நடித்து, பாலிவுட்டில், பெரிய ரவுண்டு வர வேண்டும் என்பதே, என் அடுத்த திட்டம் என்று கூறியுள்ளார்.