பிரிட்டனின் உளவு கதாபாத்திரமான "ஜேம்ஸ் பாண்ட்' ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒன்று. அந்த கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடிக்கும் "ஸ்கை ஃபால்' படத்திற்கான புதிய ட்ரைலர் வெளியாகியுள்ளது. "ஸ்கை ஃபால்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 23 -வது படமாகும். அதுமட்டுமட்டுமல்ல "ஜேம்ஸ்பாண்ட்' கதாபாத்திரம் உருவாகி 50வது ஆண்டு தொடங்குவதும் இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த பொருட் செலவில் உருவாகி வரும் "ஸ்கை ஃபால்' படத்தை சாம் மெண்டிஸ் இயக்கி வருகிறார். ஜேவியர் பார்டெம் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் ஜூடி டென்ச், ரால்ப் பெயின்னஸ், ஆல்பர்ட் பின்னர் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகிகளாக கறுப்பழகி நவோமி ஹாரிஸ், பெர்னிஸ் மர்லோகே ஆகியோர் நடிக்கின்றனர்.