தனது அப்பா சரத்குமாரின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த வரலட்சுமியின் முதல் படம் உருவாகி வருகின்றது.
சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் பெயர் போடா போடி. படத்தின் பெரும் பகுதிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.
க்ளைமாக்ஸ் காட்சிகள் சமீபத்தில் மும்பையில் படமாக்கப்பட்டது. தற்போது வரலட்சுமி சுந்தர்.சி இயக்கத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி பற்றிய சூடான தகவல், அவருக்கு Kickboxing தெரியுமாம்.
ஜப்பானிய தற்காப்பு கலையான இதற்கு தமிழில் “காலுதைச் சண்டை” என்பார்கள். குத்துச்சண்டையை போன்ற இவ்விளையாட்டை தன்னுடைய தற்காப்பிற்காக வரலட்சுமி கற்று வைத்துள்ளார்.
இவருடன் நடிகர்களில் ஜெயம் ரவி, இவ்விளையாட்டை கற்று வைத்திருக்கிறார்.
தான் நடிக்கும் பூலோகம் படத்தில் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.