>

98 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வீசப்பட்ட போத்தல் கண்டுபிடிப்பு

98 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் வீசப்பட்ட போத்தல் மீனவர் ஒருவரிடம் சிக்கியது. இது கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஸ்காட்லாந்தின் அருகில் ஷெட்லேண்ட் தீவு பகுதியில் ஆண்ட்ரூ லீபர் என்ற மீனவர் கடந்த ஏப்ரல் மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வலையில் போத்தல் ஒன்று சிக்கியது. இதற்குள் கடிதம் ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார் லீபர்.

இக்கடிதத்தில், போத்தலை கண்டுபிடிப்பவர்கள் அதை எங்கு கண்டெடுத்தனர், எப்போது.. என்ற விபரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு 6 பென்ஸ் நாணயம் சன்மானமாக வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தான் உலகின் மிக பழையான தகவல் என்பதை கின்னஸ் நிர்வாக அதிகாரிகள் உறுதி செய்ததோடு, கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்தது.
ஆனால் போஸ்ட்கார்டில் கூறப்பட்டுள்ள பென்ஸ் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் இல்லை என்பதால் லீபருக்கு சன்மானம் கிடைக்கவில்லை.

 
-