>

விருந்தாளிகளுக்கு காபி போட்டு தரும் அஜித்

அஜித்குமார் தன்னை பார்க்க வரும் விருந்தாளிகளுக்கு அவரே காபி போட்டு தருகிறார்.

சினிமாவில் நடிகர் அஜித்திற்கு பல முகங்கள் உண்டு.
சினிமா தவிர மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தய வீரர், விமானி என பல துறைகளில் வல்லவர்.

படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் தனது குடும்பத்துடன் மட்டுமே அஜித் நேரத்தை செலவிடுவார்.

மேலும் அஜித் சிறந்த சமையல் காரர் என்ற விடயம் திரையுலகினருக்கு மத்தியில் மிகவும் அறிந்த விடயம்.

அஜித் ஹோட்டலுக்கு சென்றால் அங்கு செய்யும் உணவுகளை வீட்டில் சமைத்துப்பார்ப்பார்.

அதில் ஏதேனும் தவறு இருந்தால் அந்த ஹோட்டலுக்கே போன் செய்து விளக்கம் கேட்பார்.

தற்போது தனது வீட்டிற்கு விருந்தாளிகளாக வருவோருக்கு தன் கையாலே காபி போட்டு தருகிறாராம்.

 
-