>

மலேசிய நண்பர்களோடு பிறந்தநாளை கொண்டாடிய மோனிகா

கொலிவுட்டில் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க படங்களில் நடித்தவர் 'அழகி' மோனிகா.

தற்போது மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட நாயகியாக '916' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மலேசியாவிலேயே எடுக்கும் மலேசியத் தமிழ்ப் படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை தொடங்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அங்கேயே அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத் தங்களுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

அதற்கு மோனிகாவும் சம்மதிக்கவே பிறந்த நாளை அமர்க்களமாக அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வட்டம் கொண்டாடி மகிழ்ந்தது.
இது குறித்து மோனிகா கூறும் போது, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே பெரிய சந்தோஷம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவர்கள் ஆவலாக இருந்தார்கள். அவர்களது சந்தோஷத்திற்காக நானும் சம்மதித்தேன்.

எனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடியதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாது என்றார்.


 
-