>

யாழ்ப்பாணப் பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரிக்கும் நோர்வே!


 

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அதுவும் குறிப்பாக நோர்வே வாழ் தமிழ் மக்களுக்கு புதிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.

நோர்வேயில் 60 புலம்பெயர் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பலாத்காரமாக பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு அந்நாட்டு அரசால் பொறுப்பேற்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் அநேகர் யாழ்ப்பாண பெற்றோருக்கு பிறந்தவர்கள்.
ஆரோக்கியம் அற்ற வீட்டுச் சூழல், வீட்டாரின் பாலியல் தொல்லைகள் போன்றன இப்பிரிப்புக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்படுகின்ற இப்பிள்ளைகள் நோர்வே நாட்டவர்களிடம் வளர்ப்புக்காக கையளிக்கப்படுகின்றனர்.
ஆனால் பிரிப்புக்கான காரணங்கள் வலுவானவை அல்ல என்பது பாதிக்கப்பட்டு இருக்கின்ற பெற்றோரின் வாதமாக உள்ளது.

கைகளால் உணவு உண்கின்றமை ஆசியர்களின் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களின் கலாசாரம், இதை வைத்து ஆரோக்கியம் அற்ற சூழலில் பிள்ளைகள் வளர்க்கப்படுகின்றனர் என்கிற முடிவுக்கு வர முடியாது என்பது இப்பெற்றோரின் நிலைப்பாடாக உள்ளது.
அதே போல குழந்தைகளுடன் ஒரே அறையில் படுக்கின்றமை, குழந்தைகளை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கின்றமை ஆசியர்களை பொறுத்த வரை இலங்கையர்களை பொறுத்த வரை பாலியல் தொல்லை ஆகாது என்று இப்பெற்றோர் கூறுகின்றனர்.

பிடித்துச் செல்லப்பட்டு இருக்கின்றவர்களில் 17 வயதுச் சிறுவன் ஒருவர் தற்கொலை செய்து உள்ளார்.

இந்நிலையில் பிள்ளைகளை மீட்டுத் தரச் சொல்லி இலங்கை அரசின் உதவியை பெற்றோர் கோரி உள்ளனர்.

நோர்வேக்கு சென்ற எம்மவர்கள் அந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக வாழவேண்டியது அவர்களின் கடமை ஆகும்.

 
-