>

நீதானே என் வசந்தம் படத்துக்காக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய சமந்தா


 

‘பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமந்தா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

தற்போது ஜீவா ஜோடியாக ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவுக்கு இரு மாதங்களுக்கு முன் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தோல் அலர்ஜியால் அவதிப்படுவதாக கூறப்பட்டது.

இதையடுத்து படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போது பூரண குணமாகி மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

என் உடல்நிலை குறித்து நிறைய வதந்திகள் பரப்பப்பட்டன. எனது சொந்த வாழ்க்கை பற்றி வெளிப்படையாக விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்ததால் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதனால் மணிரத்னத்தின் ‘கடல்’, ஷங்கரின் ‘ஐ’ படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்.

அக்டோபரில் இருந்து ஒவ்வொரு மாதமும் நான் நடித்த படங்கள் ரிலீசாகும். ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்துக்கு நானே சொந்த குரலில் டப்பிங் பேசுகிறேன். எனக்கு தமிழ் நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
-