>

காமெடியில் சிறந்தவர் ரஜினி தான்…புகழாரம் சூட்டும் சிம்பு..



வாலு, போடா போடி மற்றும் வேட்டை மன்னன் படங்களில் பிசியாக இருக்கும் சிம்பு, காமெடி சென்ஸ் அதிகம் உள்ள ஹீரோ ரஜினி தான் என்று சூப்பர் ஸ்டாரை புகழ்ந்து தள்ளியுள்ளார். தன்னுடைய படமான ‘வாலு’ காமெடி படம் என்பதால், அதற்காக காமெடி சென்ஸை ரஜினி படங்களை பார்த்து கத்துக் கொள்கிறாராம் சிம்பு. இது பற்றி அவர் கூறும்போது, ‘தம்பிக்கு எந்த ஊரு, அண்ணாமலை, குரு சிஷ்யன் ஆகிய படங்களில் ரஜினி சாரின் காமெடி படு சூப்பராக இருக்கும், அவரை போல எந்த ஹீரோவும் காமெடியில் அசத்தியது இல்லை, இப்ப நான் நடித்து வரும் ‘வாலு’ படம் கூட காமெடி படம் தான், இந்த தடவையும் சந்தானம் கூட்டணி அசத்தும், காமெடிக்கு முக்கியத்துவம் என்பதால் ரஜினி சாரின் பழைய படங்களிலிருந்து காமெடிகளை கற்று வருகிறேன்’ என்றார்.




 
-