>

முன்னணி நாயகர்களுடன் இணைய துடிக்கும் திவ்யா பண்டாரி

கொலிவுட்டில் ஜோதி கிருஷ்ணா இயக்கி, நாயகனாக நடித்த 'ஊ ல லா' படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யா பண்டாரி.

அதன் பின்பு வாய்ப்பு இல்லாமல் தவித்துவரும் இவர் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்க துடிக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், மும்பை பொண்ணான நான் கொலிவுட் படங்களில் நடிக்க வந்ததற்காக பெருமையடைகிறேன். தமிழில் 'ஊ..ல..ல..லா' படத்துக்கு பின்பு சரியான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

நிறைய தமிழ் படங்களை பார்த்து வசன உச்சரிப்பை கற்று வருகிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க கொலிவுட் நட்பு வட்டாரம் எனக்கு உற்சாக 'டானிக்' கொடுக்கிறது.
குஜராத்தி, மராத்தி மொழிப்படங்களை என் தந்தை இயக்கியிருக்கிறார். சினிமா
பின்னணியிலிருந்து நடிக்க வந்துள்ளேன். நான் படிக்கும் போது இயக்குனர் ஜோதிகிருஷ்ணா 'ஊ..ல..ல.லா' படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

தற்போது முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன் என்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து, பட உலகின் உயரத்தை தொடுவேன் எனவும் கூறியுள்ளார்.

 
-