>

பதவி எனக்கு திருப்புமுனை: சாய்குமார்

தென்னிந்திய மொழிப்படங்களில் சுமார் 300 படங்களுக்கும் மேல் நடித்து விட்டு இன்றும் நடிப்பு, டப்பிங் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருப்பவர் நடிகர் சாய்குமார்.

தற்போது சாய்குமார் பதவி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தில் நாயகனாக எங்கேயும் எப்போதும் ஷர்வான் நடிக்கிறார். ரூபி பரீக்கர் நாயகியாக நடிக்கின்றார்.

இந்த பதவி படத்தில் எனது கதாப்பாத்திரம் துணிச்சல் மிகுந்தது என்று சாய்குமார் தெரிவித்தார்.

போக்கிரி படத்திற்கு வசனம் எழுதிய வி.பிரபாகர் பதவி படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

நடிப்பு, டப்பிங் என்ற இரட்டை சவாரி குறித்த கேள்விக்கு, என்னுடைய அப்பா சர்மாவும் டப்பிங் கலைஞர்தான்.

சின்னப் பையனாக இருக்கும் போது அவருடன் டப்பிங் தியேட்டருக்கு செல்வேன்.

இந்த பழக்கத்தால் நானும் டப்பிங் கலைஞனாகி விட்டேன் என்றார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் மேல் அதிகமான பக்தி உண்டு. அவர் நடிப்பை பார்த்து பார்த்து நடிகனாகி விட்டேன் என்றார்.
இன்றும் மேக்கப் போடும் போது அவரது புகைப்படத்தை வணங்கி விட்டே மேக்கப் போடுவதாகவும் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் நடித்த பாட்ஷா உட்பட பல படங்கள் தெலுங்கில் வெளியானபோது சாய்குமார் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
-