தெலுங்கு படங்களில் நடிகை அமலா பால் கவர்ச்சியாக நடித்து வருவதன் பொருட்டு அவருடைய ஆதிக்கம் தெலுங்கிலும் பரவ வாய்ப்பிருக்கின்றது.
மைனா நாயகி அமலா பால் முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை படங்களில் ஓரளவு கவர்ச்சியாக நடித்திருந்தார்.
தற்போது தமிழில் ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுசுடன் சொட்ட வாளக்குட்டி படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடிக்கும் படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடிக்கிறாராம்.
இப்படத்தில் வரும் பாடலொன்றில் மழையில் நனைந்த படி நடித்துள்ளார். தெலுங்கு படங்களை பொறுத்தவரை நடிகைகளின் கவர்ச்சிக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.
அந்த வகையில் அமலா பாலின் ஆதிக்கம் தெலுங்கிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.