நண்பன் வெற்றிக்கு பின்னர், ஸ்ரீகாந்த் நடித்திருக்கும் படம் பாகன்.
இப்படத்தை அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக ஜனனி அய்யர் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் ஸ்ரீகாந்தின் வாகனமே சைக்கிள்தான். சைக்கிளை மையமாக வைத்தே பாகன் படத்திற்கான வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை பாகன் திரைப்படத்திற்கான இசை வெளியீடு நடந்தது. இதில் இயக்குனர் அமீர் உட்பட திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.
அப்போது அமீர் பேசியதாவது, பாகன் படம் சைக்கிளோடு தொடர்புடையது. எனது சைக்கிள் அனுபவம் புதுமையானது.
காதலியைப் போல கடைசி வரை சைக்கிள் எனக்கு கிடைக்க வில்லை என்றார்.
தனது வீட்டிற்கு அருகில் பள்ளிக்கூடம் இருந்தமையால் தனது தாயார் சைக்கிள் வாங்கித்தரவில்லை என்று கூறினார் அமீர்.
இயக்குனர் அஸ்லமும் சமுத்திரக்கனியும் எனக்கு பூசாரியாக இருந்ததாக தெரிவித்தனர். அவர்கள் பூசாரியாக இருக்க நான் ஒன்றும் கடவுள் இல்லை என்றார்.